திங்கள், 14 நவம்பர், 2011

நன்னெறி

நேத்து தான் என் பையனுக்கு ஒரு மன பாட செய்யுள்(நன்னெறி) சொல்லி தந்தேன் இதோ அது
பெரியவர்தந் நோய்போற் பிறர்நோய்கண் டுள்ளம்
எரியின் இழுதாவ தென்க - தெரியிழாய் !
மண்டு பிணியால் வருந்து பிறவுறுப்பைக்
கண்டு கலுழுமே கண்.

பொழிப்புரை : எரியின் - நெருப்பை கண்ட நெய் போல், பிறர் துன்பத்தை பார்த்து மேன்மக்கள் உருகுவர். அழகிய அணிகலன்களை அணிந்த பெண்ணே, அது எது போuன்றதேனில், தீராத நோயால் வருத்தும் பெற உறுப்பை கண்டு அழும் கண் போன்றது. இது வெறும் அர்த்தம் தான், இதில் உங்களுடைய imaginationai சேர்க்கும் பொது இந்த பாட்டின் அர்த்தம் பன்மடங்கு பெருகும்.

தமிழை விரும்பி படிபவற்கு அதன் சுகத்திற்கு ஈடு எதுவும் இல்லை.

நன்றி
தேவேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக