வியாழன், 17 டிசம்பர், 2009

ஜயேந்​திரர் அட்வைசும் நம்ம கருத்தும்


மனி​தத் தன்​மை​யு​டன் ​ வாழ்​ப​வர்​களே உயர்ந்த மனி​தர்​கள் என்​றார் காஞ்சி காம​கோடி பீடா​தி​பதி ஜகத்​குரு ஸ்ரீ ஜயேந்​திர சரஸ்​வதி சுவா​மி​கள்.​ - இது தினமணி நியூஸ்.



மேற்சொன்ன அருள்மொழிகள்
ஜயேந்​திரர் லேட்டஸ்டா சொன்னது. என்ன கொடுமைனா, தலைவர் தான் ஆள் வைத்து சங்கர ராமனை கொன்னாருன்னு ஜெயலலிதா கேஸ் எல்லாம் போட்டு, இன்ணமும் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. இதில் நேற்று நியூஸ் என்னன்னா, அந்த வழக்கில் மூன்று பேர் பிறழ்சாட்சியா மாறிட்டதா கோர்ட் சொல்லுது.

ஒன்னு மட்டும் புறியலை, தனி மனித ஒழுக்கம் இல்லாதவர்கள் எப்படி ஒரு மடத்தின் அதிபதியாக இருக்க முடிகிறது. இவர் மீது ஏகப்பட்ட பாலியல் புகார்களும் கூறப்பட்டதுண்டு, ஆணால், ஒன்றுமே நடவாதது போல் இவர் இன்று நமக்கு அட்வைஸ் பண்றார்.

இந்தியாவில் மட்டும் தான் இப்படி குற்றம் சாட்டப்பட்டவர்கள், ஆட்சி மாறியவுடன் சில மாதங்களில் அல்லது சில வருடங்களில் வெளியே வந்து விட முடியும், அதோடு முன்பையும் விட மிக செல்வாக்குள்ளவராக வெட்கம் இல்லாமல் வளம் வர முடிகிறது.


செவ்வாய், 10 நவம்பர், 2009

ஆட்டோ ஓட்டுநருக்கு மட்டுமே உரிமம் வழங்க பரிசீலனை: அமைச்சர் கே.என்.நேரு

ஒரு காலத்தில் (1980's) நடுத்தர குடும்பங்களின் part time income ஆக கருதப்பட்ட ஆட்டோ வாடகை தொழில் பிறகு, சேட்டு பசங்களும் போலீஸ்காரர்களின் கைகளுக்கு போய்விட்ட பின். ஆட்டோகாரர்கள் அட்டகாசம் தாங்க முடியலை. கம்ப்ளைன்ட் பண்ணா ஒன்னு போலீஸ்காரர் ஆட்டோவா இருக்கும் இல்லை லோக்கல் கவுன்சலர் ஆட்டோவா இருக்கும், இந்த லட்சனத்தில் இவங்க எங்க இருந்து நடவடிக்கை எடுகர்த்து ?

ஆட்டோ ஓட்டுநருக்கு மட்டுமே உரிமம் வழங்க பரிசீலனைனா , மேற்சொன்ன மக்க எல்லாம் மாறு வேஷம் புனைந்து duty பார்ப்பாங்களோ?

இந்தியாவின் Venice எது தெரியுமா?

Venice ஒரு மிதக்கும் நகரம். இந்தியாவின் Venice எது தெரியுமா? கெஸ் பண்ணுங்க பார்ப்போம். எல்லாம் தானை தலைவர் கருணாநிதியின் ஆட்சியில் உள்ள சென்னை மாநகரம் தான் . அவனவன் 30 அல்லது 40 வருஷம் ஆனாலும் செய்ய முடியாத சாதனையை நாட்டுக்கு எதுவுமே செய்யாம எப்படி செய்தார்பார் தலைவர்.


தெருவுல கிடந்த எங்க அக்காவ , எப்படி boat ஓட்ட விட்டார்பார் தலைவர். எதிர் கட்சி செய்யாத சாதனை இது. இதைப்பற்றி அவரிடம் கேட்டால், வெள்ளத்து தனையது மலர் நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனையது.... - னு குறளுக்கு புது பொருளுரை தருவாரு.





இனி திண்டுகல்லில் இருந்து கோயம்பேடு வரவங்க பஸ்சுக்கு அல்லாட வேண்டியது இல்லை. அவங்க வீட்டுகிட்டேயே போட் எடுத்தா ஒன்னு Marina இல்லை கோயம்பேடு வந்து சேருவீங்க. ஹாப்பி தானே? என்ன கொஞ்சம் கெட்டி ஆயுசு வேண்டும்.


மெட்ராஸ்ல புதுசா ஆரம்பிச்சிருக்ற transport சர்வீஸ் இது. மவனே இனி இது பேரு "கலைஞர் கால்வாய் போக்குவரத்து திட்டம்". நீங்க டிக்கெட் எல்லாம் எடுக்க வேண்டியது இல்லை, நீங்க boatla மட்டும் ஏறுங்க, நாங்களே உங்களுக்கு டிக்கெட் வாங்கி கொடுத்துடுவோம்.

வீட்டுல தண்ணி கம்மியா இருகர்த்தா மக்கள் complaint பண்ணினதால, மேயர் வந்து பார்த்திட்டு உடனே நடவடிக்கை எடுத்து தண்ணிய அதிகரிகர்த்தா வாக்குறுதி அளிச்சிருகாரு.

திங்கள், 18 மே, 2009

பிரபாகரன் மரணம் - இலங்கை செய்தி

பிரபாகரன் மரணம் என்ற செய்தி இலங்கையின் மற்றுமொரு கட்டுக்கதை.

வெள்ளி, 6 மார்ச், 2009

சாவிலும் இணைபிரியா தம்பதி

தினமணியில் வந்த இந்த செய்தி என்னை மிகவும் பாதித்த ஒன்று. LInk "http://dinamani.com/NewsItems.asp?ID=DND20090305203557&Title=Districts+News&lTitle=U%F4YhPf+%F9Nn%A7Ls&Topic=0&ndate=3/6/2009&dName=%FAL%F4%FBY&Dist=-௨"
ஒரு காலத்தில் பெற்ற பிள்ளைகள் இல்லாவிட்டாலும் அக்கம் பக்கத்தினர் உதவி செய்த நிலை போய் இன்று பிள்ளைகள் இருந்தும் அனாதைகளாய் வயது முதிர்ந்த பெரியோர் படும் அவஸ்த்தை சொல்லி மாளாது. என்னவாயிற்று இந்த தமிழகத்திற்கு? எங்கு நோக்கிலும் சுயநலமும், பொருள் அபகரிக்கும் தன்மையும் மிகமிஞ்சி காணப்படுகிறது. வள்ளல்களாய் வாழ்ந்த நம் மக்கள் எங்கே? நம் இனம் இலங்கையில் அழியும் போதும் பொங்கி எழாமல், பெற்றோரை பேணாமல் ,சூடு சொரணை அற்று வெறும் சோத்து பிண்டங்களாய் வலம் வர எவரிடத்தில் கற்றோம்? ஒன்று மட்டும் நிச்சயம், நம் இனத்திற்கு , நம் சுற்றத்திற்கு இன்று நாம் உதவ மறுத்தால் நாளை அழிந்த முதிற்குடியின் வரலாற்று வரிசையில் தமிழ் இனமும் சேரும், அதனை தடுப்பதும் தடுக்காமல் இருப்பதும் நம் கையில் தான் உள்ளது.

திங்கள், 23 பிப்ரவரி, 2009

ரஹ்மான் ஆஸ்கார் விருது பெற்றமைக்கு நம் வாழ்த்துக்கள்.

ரஹ்மான் ஆஸ்கார் விருது பெற்றமைக்கு நம் வாழ்த்துக்கள். ஆனால் அவருடைய மிக சிறந்த படைப்புக்களில் SLUMDOG MILLIONAIRE ஒன்றா என்று கேட்டால் நமக்கு நிச்சயமாக கூற இயலாது. கலைஞானி கமலஹாசன் கூறியது போல், ரஹ்மான் முன்னமே பெற்றுருக்க வேண்டிய விருதுதான் oscar. அவருடைய திருமையை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது ஆனால் oscar விருது பெறுவது தான் திறமையின் அளவுகோலோ அல்லது அங்கிகாரமோ கிடையாது. அப்படி பார்க்க போனால் நம் MSV, ராமமூர்த்தி மற்றும் இளையராஜா போன்றோர் இசையை என்னவென்பது. oscar, வெறும் வெள்ளைகாரர்கள் அவர்களுகுள்ளாகக் வெகுமதித்து கொள்ளும் ஒரு விருது. நம்மவர்கள் அதனை பெற்றால் மகிழ்ச்சி இல்லாவிட்டாலும் மகிழ்ச்சியே . என்ன, இந்தியன் எங்கும் எந்த களத்திலும் சாதிப்பான் என்பதனை ரஹ்மான் நிருபித்துள்ளார்.

புதன், 18 பிப்ரவரி, 2009

ஸ்ரீலங்கா ஆலோசகர் பொறுப்பை நாராயண் மூர்த்தி நிராகரிப்பு

இலங்கை அரசாங்கம் தந்த ஆலோசகர் பொறுப்பை நாராயண் மூர்த்தி நிராகரிததன்மூலம் தான் ஒரு சிறந்த மனிதர் என்பதை மீண்டும் நிருபித்துள்ளார் . அங்கு நம் சக தோழ்ர்கள் வாழ வழி இன்றி நடோடிகலாய் திரிகையில், இலங்கை அரசாங்கமோ தன்னை வளபடுத்திகொள்ள நம்மவரையே கொண்டு நம் கண்ணை பறிக்கும் செயலை வழக்கபடுத்திகொண்டுள்ளது. இத்தனை அறிந்தும் நம் நடுவண் அரசு நமக்கு எதிராய் இலங்கைக்கு உதவுகிறது, இவ்வேளையில் மூர்த்தி இலங்கைக்கு நல்ல மூக்கறுப்பு தந்துள்ளார். நடு நிலைமையாய் சிந்தித்து முடிவு எடுத்த அவரை வாழ்த்துவோமாக.

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009

SlumDog Millionaire

There has been a hell lot of hype going around the world about SDM being projected as a original version of Indian slums, original script, original music bla bla bla. Several debate, comments has been fired from both side of critics including celebrities. One thing here i would like to bring on is AR's music score for SDM. People were saying that both songs and recording were reflecting the original music of India in SDM and it is the fully justifiable for nominations and awards. It is an appaling thing for me. AR is the same man who choired the music for Laagan and for me that is more Indianess than the SDM. If that music is not reflecting true indianness, then SDM is no where near the true music of India and its slum. I wonder, if laagan would have directed and made in English by an westener, then it could have bagged many more oscars. I am here not against AR or critizing his legendary skills, but the measurement differs so drastically for the same person is somewhat made me to think about whether it is worth to really consider the awards as a real metrics of one's geniousness.