வியாழன், 17 டிசம்பர், 2009

ஜயேந்​திரர் அட்வைசும் நம்ம கருத்தும்


மனி​தத் தன்​மை​யு​டன் ​ வாழ்​ப​வர்​களே உயர்ந்த மனி​தர்​கள் என்​றார் காஞ்சி காம​கோடி பீடா​தி​பதி ஜகத்​குரு ஸ்ரீ ஜயேந்​திர சரஸ்​வதி சுவா​மி​கள்.​ - இது தினமணி நியூஸ்.



மேற்சொன்ன அருள்மொழிகள்
ஜயேந்​திரர் லேட்டஸ்டா சொன்னது. என்ன கொடுமைனா, தலைவர் தான் ஆள் வைத்து சங்கர ராமனை கொன்னாருன்னு ஜெயலலிதா கேஸ் எல்லாம் போட்டு, இன்ணமும் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. இதில் நேற்று நியூஸ் என்னன்னா, அந்த வழக்கில் மூன்று பேர் பிறழ்சாட்சியா மாறிட்டதா கோர்ட் சொல்லுது.

ஒன்னு மட்டும் புறியலை, தனி மனித ஒழுக்கம் இல்லாதவர்கள் எப்படி ஒரு மடத்தின் அதிபதியாக இருக்க முடிகிறது. இவர் மீது ஏகப்பட்ட பாலியல் புகார்களும் கூறப்பட்டதுண்டு, ஆணால், ஒன்றுமே நடவாதது போல் இவர் இன்று நமக்கு அட்வைஸ் பண்றார்.

இந்தியாவில் மட்டும் தான் இப்படி குற்றம் சாட்டப்பட்டவர்கள், ஆட்சி மாறியவுடன் சில மாதங்களில் அல்லது சில வருடங்களில் வெளியே வந்து விட முடியும், அதோடு முன்பையும் விட மிக செல்வாக்குள்ளவராக வெட்கம் இல்லாமல் வளம் வர முடிகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக