திங்கள், 14 நவம்பர், 2011

வேலாயுதம் விமர்சனத்திற்கு பதில்

சிவா,
இதை நீங்கள் எழுதியதா அல்லது வலைபூவில் (blog) -இல் இருந்து சுட்டதா என்று தெரியவில்லை ஆனாலும் ஒரு விஜய் ரசிகனின் தகப்பன் என்ற முறையில் பதில் சொல்ல கடமை பட்டுள்ளேன்.
பல ஆங்கில படங்களின் (Terminator, Iron Man, Tron, Batman) தழுவலான Ra.One ஐ நல்லா இருக்கு என்று சொன்ன நீங்கள், விஜய் படத்தை மட்டும் ஏன் நக்கீரர் கண் கொண்டு பார்க்க வேண்டும்? உங்கள் விமர்சனதிருக்கு இதோ பதில் ..

எங்கள் தலைவர் எப்போதும் பழசை மரகறவர் இல்லை, ஏன் அவருக்கு ஒரு படத்தில் தான் தங்கச்சி இருக்கணுமா, எண்பதுகளில் பெரும்பாலான ரஜினி படங்களில் தங்கச்சிகள் கற்பழித்து கொல்லப்பட்டபோது ரசித்து பார்த்து ஒரு வார்த்தை கூட சொல்லாத நீங்கள், விஜய் தங்கச்சி கற்பழிக்கபடாமல் காபற்றியதால் வந்த கோபமோ ?

அது என்ன "அவரு யார் தெரியுமா" என்று கேட்ட அதே கிழம் இங்கும் வந்தால் என்ன தப்பு? எத்தனை MGR படங்களில் பண்டரிபாய் அம்மாவா வந்த போது சும்மா தானே இருந்தீங்க அப்போ எல்லாம் continuity பார்த்த நீங்க இங்க மட்டும் ஏன் குறை பார்கறீங்க? அந்த படத்தில் வந்த அதே பொது சனம் இங்கும் வந்ததா நினைச்சுட்டு போங்க.

"அவரு காட்டட்டா என்றால் கண்ணை எதுக்கு மூடனும்? சார், பிரச்சனை உங்க மனசுல இருக்கு, மக்கள் அதனை பெரும் அவர் எதை காட்டுவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருக்க, நீங்க மட்டும் தான் வில்லன் தொலைவில் போய் விழ்ததிற்கு வருத்தம் தெரிவிக்கிறீங்க. வேற என்னத்த காட்டுவாருனு எதிர்பார்த்தீங்க? வர வர வயசாகவே உங்களுக்கு ஒன்னும் முடியல.

ஏன் சார், காலம் காலமா, விஜய காந்தும், அர்ஜுனும் பாகிஸ்தான் தீவிரவாதிகளோட சண்டை போட்டு இப்ப தான் கொஞ்சம் retire ஆனாங்க, இதை சாக்கா வச்சி உள்ளே நுழைய முயன்றவர்களை எங்கள் தலைவர் கொன்னா உங்களுக்கு என்ன பொறமை? உங்களுக்கு சிங்கப்பூரில் இருந்து இருந்து கொஞ்சம் கூட தேச பக்தியே இல்லாமல் போயிடுச்சு. பேசாம உங்களை துபாய்கே பழையபடி பார்சல் பண்ண வேண்டியது தான்.

ஒரு ஹீரோ-நா, பல பெண்கள் காதலிக்கத்தான் செய்வாங்க, ஏன் நாம ஆபீஸ் எடுத்துகோங்க, எத்தனை chinese உங்களை மயக்க பார்த்தாங்க, ஆனா நீங்க ஸ்டீடியா நிக்கலை? பொறாம படாதீங்க சார், அவங்க அவங்கலுக்கு கிடச்சதை வெச்சு ஒப்பேத்துவோம்.

உங்கள் mail லால தடவி தடவி type பண்ணதில் ஒரு மணி நேரம் waste. இனிமேலாவது நீங்களும் வேலை செய்து மத்தவங்களையும் வேலை செய்ய விடுங்க.

நன்றி
தேவா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக