வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

நீரிலலையும் முகம் (பாவை புப்ளிகேஸன்ஸ்)

சமீபத்தில் படித்தது

கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய நீரிலலையும் முகம் (பாவை பப்ளிகேஷன்ஸ்)

வெகுநாளைக்கு பிறகு கவிதை தொகுப்பை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிக சிறந்ததொரு தொகுப்பு என்று சொல்லமுடியாவிட்டாலும், சில வெகு அற்புதமான கவிதைகளும் உண்டு. எனக்கு பிடித்த சில கவிதைகளை இங்கு தந்துள்ளேன் உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்

நானும் அந்த நாயும்
குழந்தைக்கு சோறூட்டும்
மையப்புள்ளியில் சந்தித்துக்கொள்கிறோம்

கையில் எடுக்கும் ஒவ்வொரு கவளமும்
உள்ளிறங்க வேண்டும் என நானும்
கிழே விழ வேண்டும் என நாயும்
அவரவர் எதிர்பார்ப்பில்

...................................

நுனியை விட்டு
இலையை விட்டு
கிளையை விட்டு
வேருக்குத் தீயிட்டுச் செல்கிறான்
அதோ அந்த நெடுஞ்சாலைக்காரன்.

இன்னும்
காற்றுடன் விளையாடிக்கொண்டிருக்கும்
கொழுந்திலைக்கு
மரணத்தை சொல்லப்போவது யார்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக