வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

கவிதை

எரிநட்சத்திரம்
==========
இவ்வளவு நேரம்
வானத்தில்
புது மணப்பெண்ணாய்
ஜாலித்துக்கொண்டிருந்தாய்
நீ

உடல்முழுதும்
நெருப்பெரிய
எந்த
மாமியார் வைத்தாள்
உன்னக்கு
தீ

நீரிலலையும் முகம் (பாவை புப்ளிகேஸன்ஸ்)

சமீபத்தில் படித்தது

கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய நீரிலலையும் முகம் (பாவை பப்ளிகேஷன்ஸ்)

வெகுநாளைக்கு பிறகு கவிதை தொகுப்பை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிக சிறந்ததொரு தொகுப்பு என்று சொல்லமுடியாவிட்டாலும், சில வெகு அற்புதமான கவிதைகளும் உண்டு. எனக்கு பிடித்த சில கவிதைகளை இங்கு தந்துள்ளேன் உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்

நானும் அந்த நாயும்
குழந்தைக்கு சோறூட்டும்
மையப்புள்ளியில் சந்தித்துக்கொள்கிறோம்

கையில் எடுக்கும் ஒவ்வொரு கவளமும்
உள்ளிறங்க வேண்டும் என நானும்
கிழே விழ வேண்டும் என நாயும்
அவரவர் எதிர்பார்ப்பில்

...................................

நுனியை விட்டு
இலையை விட்டு
கிளையை விட்டு
வேருக்குத் தீயிட்டுச் செல்கிறான்
அதோ அந்த நெடுஞ்சாலைக்காரன்.

இன்னும்
காற்றுடன் விளையாடிக்கொண்டிருக்கும்
கொழுந்திலைக்கு
மரணத்தை சொல்லப்போவது யார்?

திங்கள், 1 பிப்ரவரி, 2010

The Corrupt Society - the criminalization of India from Independence to the 1990s" by Chandan Mitra pub 1998 (penguin books india)

சமீபத்தில் படித்தது "The Corrupt Society - the criminalization of India from Independence to the 1990s" by Chandan Mitra pub 1998 (penguin books india)
இந்தியா சுதந்திரம் வாங்கியது முதல் 1990கள் வரை நடந்த ஊழல்களை பட்டியலிட்டு காண்பித்திருக்கும் ஒரு நல்ல புத்தகம். இப்போதிய தலைமுறை ஏதோ ஊழல் புரிவது 1970 அல்லது 1980 களில் ஆரம்பித்த ஒன்றாகத்தான் நினைத்துகொன்றிருந்தோம். ஆனால் சுதந்திரம் வாங்கிய ஒரு வருடத்திற்குள் ஊழல் புரிவது ஆரம்பித்து விட்டது என்பது அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது. 800 Jeep வாங்க 8 லட்சம் விலை பேசப்பட்டதும், அதுவும் இல்லாமல் அவை 'RECONDITIONED' என்பதும், மேலும் முதல் தவணையாக வந்திறங்கிய 100+ வண்டிகள் அனைத்தும் காயலாங்கடைக்கு போகத்தான் லாயக்கானவை என்பது மட்டும் அல்லாமல் அதற்கு காரணமான நேருவின் நண்பரான இங்கிலாந்து தூதர் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டதும் இந்தியாவின் ஊழலுக்கு பிள்ளையார் சுழியாகும்.

பல சுவாரிஸ்யமான தகவல்கள் இப்புத்தகத்தில் பல உள்ளது, எடுத்துகாட்டாக , லாலு நடத்தேரிய மாட்டு தீவன ஊழல் வழக்கில், இரண்டு எருமை மாடுகளை ஸ்கூட்டரில் எடுத்து சென்றதாக அதிகாரிகள் குறிப்பு எழுதி இருப்பது, ராஜீவ் காந்தி ஹெலிகாப்ட்டர் ஊழல் வழக்கு ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.

ஆனால் நாம் நித்தம் உழன்று கொண்டிருக்கும் இந்த ஊழல் யூகத்தில், அதையே திருப்பி படிப்பது சில நேரங்களில் சலிப்பை வரவழைக்கிறது மற்றபடி படிக்க உகந்த ஒரு புத்தகம்.

திங்கள், 18 ஜனவரி, 2010

இறைச்சிகாடு

சமீபத்தில் படித்த புத்தகம் 'இறைச்சிகாடு'

இந்த புத்தகத்தின் அடிநாடி, சோசியலிச கொள்கைகள் ஆகும். இதனை அமெரிக்கா தொழில்மயமாக தொடங்கிய கால கட்டத்தில் நிகழும் கதையாக செழுமையாக கையாலப்பட்டிருகிறது. கதையின் நாயகன் உட்கீஸ் லிதுவேனியா நாட்டில் இருந்து கனவுகளோடு அமெரிக்கா குடிபெயர்ந்து அங்கு வாழ்வை துவக்கும் முன் முதலாளித்துவ குள்ளனரிகளின் தொழிற்சாலை அரசியலில் அகப்பட்டுக்கொண்டு வேலை இழந்து அவன் கனவுகள் நொறுங்கி சோசியலிச பாதைக்கு திருபுவதே கதையின் கரு.

இந்த கதையின் சிறப்பு, தொழில் மயமாவதர்க்கு முன் இருந்த அமெரிக்காவை கண் முன் நிறுத்தி இருபது. ஆரம்பகால அமெரிக்க தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளை நிலைநிறுத்திக்கொள்ள பட்ட சிரமங்களை மிக நேர்த்தியாக சொல்லியிருகிறார் ஆசிரியர்.

நிச்சயம் ஒரு முறை படிக்க உகந்த புத்தகம்.

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

desktop applications ல், தமிழில் டைப் செய்வது எப்படி? விளக்கம்

தமிழில் உங்க டெஸ்க்டாப் applications மூலமாக நேரடியாக டைப் செய்ய கூகுளின் transliteration உபயோகிப்பது மிகவும் எளிமையானது. அதற்கான முழு விவரமும் கிழ்கண்ட 'தொற்றில்' உள்ளது.


http://www.google.com/ime/transliteration/help.html#installation

எங்கள் அலுவலகத்தில் நாங்கள் மின்னஞ்சல் செய்வதற்க்கு Lotus Notes மென்பொருைள உபயோகிக்கிறோம். வெகு நாளாக நாம் நேரடியாக டைப் செய்ய வசதியாக ஏதாவதொரு மென்பொருள் அமையாதா என்று தேடிக்கொண்டிருந்ததேன். பல மென்பொருள்களை சோதித்தும், அவை ஒன்று பழகுவதற்கு கடினமாக இருந்தது அல்லது டெஸ்க்டாப் application compatibility பிரச்சனை இருந்தது.

நான் சில காலமாக ஊடகங்களில் கமண்ட்ஸ் இடுவதற்கு google transliteration உபயோகித்து வருகிறேன். அவற்றை நேரடியாக உபயோகிக்க ஏதாவது வழிமுறை உள்ளதா என்று தேடியதில் கிடைத்தது தான் மேற்ச்சொன்ன இடுகை.

நீங்கள் இதனை உபயோகிப்பதாக இருந்தால், இதனுடைய short cuts எல்லாம் மனனம் செய்துக்கொள்ளுங்கள், அது மிகவும் உபயோகமாக இருக்கும்.