தினமணியில் வந்த இந்த செய்தி என்னை மிகவும் பாதித்த ஒன்று. LInk "http://dinamani.com/NewsItems.asp?ID=DND20090305203557&Title=Districts+News&lTitle=U%F4YhPf+%F9Nn%A7Ls&Topic=0&ndate=3/6/2009&dName=%FAL%F4%FBY&Dist=-௨"
ஒரு காலத்தில் பெற்ற பிள்ளைகள் இல்லாவிட்டாலும் அக்கம் பக்கத்தினர் உதவி செய்த நிலை போய் இன்று பிள்ளைகள் இருந்தும் அனாதைகளாய் வயது முதிர்ந்த பெரியோர் படும் அவஸ்த்தை சொல்லி மாளாது. என்னவாயிற்று இந்த தமிழகத்திற்கு? எங்கு நோக்கிலும் சுயநலமும், பொருள் அபகரிக்கும் தன்மையும் மிகமிஞ்சி காணப்படுகிறது. வள்ளல்களாய் வாழ்ந்த நம் மக்கள் எங்கே? நம் இனம் இலங்கையில் அழியும் போதும் பொங்கி எழாமல், பெற்றோரை பேணாமல் ,சூடு சொரணை அற்று வெறும் சோத்து பிண்டங்களாய் வலம் வர எவரிடத்தில் கற்றோம்? ஒன்று மட்டும் நிச்சயம், நம் இனத்திற்கு , நம் சுற்றத்திற்கு இன்று நாம் உதவ மறுத்தால் நாளை அழிந்த முதிற்குடியின் வரலாற்று வரிசையில் தமிழ் இனமும் சேரும், அதனை தடுப்பதும் தடுக்காமல் இருப்பதும் நம் கையில் தான் உள்ளது.
வெள்ளி, 6 மார்ச், 2009
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)